சென்னை மாநகராட்சியை ஆளில்லா விமானம் மூலம், புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் படம் தயாரிக்கும் பணியை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
இன்று காலை ஆர்.ஏ. புரம் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இந்த பணியை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார். சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாடு, உள்துறை, இராணுவம், போலீஸ் அனுமதி பெற்று வரைபடம் தயாரிக்கப்படவுள்ளது.
சென்னையின் மொத்த பரப்பளவான 426 ச.கிமீட்டரை, ஒரு நாளைக்கு 6 ச.கிமீ வீதம், 120 நாட்களில் வரைபடம் தயாரிக்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவையின் மூலம் இந்த வரைபட தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. ஆசியாவிலேயே முதன் முறையாக 426 ச.கிமீ பரப்பளவிற்கு, பாதுகாப்பு துறை ஒப்புதலுடன் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.