செவ்வாய், 21 நவம்பர், 2017

ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்த இலங்கை கடற்படை! November 21, 2017

Image

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள், 30-க்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். இதனால் மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதன் மூலம் படகு ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் வரை தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாகை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 28 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.