செவ்வாய், 21 நவம்பர், 2017

அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் அளிக்கப்படாததால் நிகழ்ந்த அவலம் November 21, 2017

Image

வேதாரண்யம் அரசு மருத்துவமணையில் அமரர் ஊர்தி இல்லாததால் சடலத்தை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கிச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட மணியன் தீவை சேர்ந்த நடராஜன் லோடு ஆட்டோ மோதி காயமடைந்தார். இதையடுத்து, வேதாரண்யம் மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால், வழியிலேயே நடராஜன் உயிரிழந்ததால், வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாததால், சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் உறவினர்கள் தவித்தனர். 

இதையடுத்து, மருத்துவமனையில் நோயாளிகளை தூக்கி செல்ல உதவும் இரும்பு படுக்கையில் படுக்க வைத்து, 6 கிலோ மீட்டர் தூரம் சடலத்தை தூக்கி சென்று சொந்த ஊரில் இறுதி சடங்கு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.