Home »
» மூலிகைச் செடி வளர்ப்பிற்கு வனத்துறையில் ஆதரவை எதிர்நோக்கும் விவசாயிகள்! November 6, 2017
மூலிகைச் செடிகளை விவசாயிகள் வளர்க்க வனத்துறை உதவும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட இந்த மனுவில், மருத்துவ குணம் வாய்ந்த முடக்கத்தான் கீரை, பிரண்டை, கீழாநெல்லி உள்ளிட்டவற்றை விவசாயிகள் அதிக அளவில் வளர்க்க தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை, வனத்துறை ஆகியவை இவ்விவகாரத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். மருத்துவ குணமுள்ள இந்த வகை மூலிகைகளின் பயன்பாட்டை அதிகரிப்பதன்மூலம், பொதுமக்களின் ஆரோக்கியம் மேம்படும் என்றும், மருத்துவ செலவு கோடிக்கணக்கில் குறையும் என்றும் விவசாயிகள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Posts:
அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் யார்? : இன்று இரவுக்குள் முடிவு அறிவிப்பு..!! August 05, 2017
பரபரப்பான சூழலில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவி க… Read More
தண்ணீரில் குதிப்பதாக நினைத்து மது போதையில் 2,000 அடி பள்ளத்தாக்கில் குதித்த இளைஞர்கள்.. அதிர்ச்சி வீடியோ..!! August 05, 2017
மகாராஷ்டிர மாநிலத்தில் சிந்துதுர்க் மாவட்டம் அம்போலி காட் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற நண்பர்கள் இரண்டு பேர், 2,000 அடி பள்ளத்தாக்கில் விழுந்த… Read More
உலக நாடுகளை கதறவிட்ட ‘ரேன்சம்வேர்’ சைபர் தாக்குதலை முறியடித்த இளைஞர் திடீர் கைது.. காரணம் என்ன? August 04, 2017
வானாகிரை ரேன்சம்வேர்: இந்தப்பெயர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக நாடுகளையே நடுங்க வைத்த ஒரு பெயராக இருந்து வந்தது.அமெரிக்கா, சீனா, … Read More
5,8ம் வகுப்புகளில் தேர்ச்சி கட்டாயம்! 25 மாநிலங்களில் திருத்தம்! August 05, 2017
இந்தியாவில் அனைவருக்கும் கல்வித்திட்டம் 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 6 முதல் 14 வயது வரை அனைவருக்கும் … Read More
பண மதிப்பிழப்புக்கு பிறகு அதிகரிக்கும் தங்கத்தின் தேவை! - பதுக்கப்படுகிறதா தங்கம்? August 04, 2017
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் தங்கத்திற்கான தேவை மற்றும் தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.201… Read More