திங்கள், 6 நவம்பர், 2017

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்! November 6, 2017

Image
வள்ளியூரை சேர்ந்த வழக்கறிஞர் செம்மணியை காவல்துறையினர் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெற உள்ளது. 

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் செம்மணி, கூடங்குளம் அணுஉலை போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, வழக்குகளில் ஆஜராகி வந்தார். இருதினங்களுக்கு முன்பு நள்ளிரவில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட செம்மணியை வழக்கறிஞர்கள் மீட்டனர். 

அப்போது காவல்துறையினர் தாக்கியதில், காலில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், செம்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியம், செம்மணி தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழகம் புதுச்சேரியில் 65 ஆயிரம் வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்றத்தை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்தார்.