வெள்ளி, 8 டிசம்பர், 2017

​வனக்குட்டையில் கொட்டப்பட்டும் ரசாயன கழிவுகளால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்! December 8, 2017

Image

பவானிசாகர் அருகே வனக்குட்டையில் ரசாயன கழிவுகள் கொட்டப்படுவதால், தண்ணீரை குடிக்கும் விலங்குகள் உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டுவிலங்குகள் உள்ளன. எரங்காட்டூர் சாலையில் உள்ள வனக்குட்டையில் காட்டு விலங்குகள் தண்ணீர் குடித்து செல்கின்றன. 

இதனிடையே அங்கு கடந்த சில மாதங்களாக ரசாயன கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக தண்ணீர் மாசடைந்து, விஷமாக மாறியுள்ளது.

இதனால் இந்த நீரை குடிக்கும் விலங்குகள் உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.