தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை இந்த மாதத்திற்குள் முடிக்க உணவுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 கோடியே 94 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், ஒரு கோடியே 83 கோடி குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த மாதத்திற்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவலை உணவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.