வெள்ளி, 8 டிசம்பர், 2017

ஐ.டி வேலையை உதறிவிட்டு ஆன்லைனில் கீரை விற்பனை செய்யும் இளைஞர்! December 8, 2017

Image

கோவையில் முதல் முறையாக ஒர் இணையதளம் துவங்கி தற்போது ஆன்லைனில் கீரை விற்பனை நடந்து வருகிறது. இந்த புதுமையான விற்பனை முறை பற்றி தற்போது பார்க்கலாம். 

புத்தகங்கள் முதல் சுவையான உணவு வரை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும். வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடும். அதே போல் கோவையில் கீரை விற்பனைக்கென ஒர் இணையதளத்தைக் துவங்கி "கீரைக்கடை.காம்" எனும் பெயரில் ஒரு கடையும் நடத்தி வருகிறார், ஸ்ரீராம் பிரசாத். ஐடி-யில் வேலை செய்து வந்த இவர், ஒரு கட்டத்தில் வேலை பிடிக்காமல் விவசாயத்தில் ஆர்வம் கொண்டு, தற்போது கீரை விவசாயம் செய்து அதை இணையம் வழியாக விற்பனை செய்து அசத்தி வருகிறார்.

விவசாயத்தையும், தொழில்நுட்பத்தையும் இணைப்பதாக இந்த இணையதளம் இருக்கும் எனவும் கீரைகளை எங்களது சொந்த பண்ணையில் மட்டுமின்றி அருகில் உள்ள பகுதியான இருகூர், சூலூர், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விற்பனைக்கு எடுத்துகொள்வதாகவும், அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அதில் தாங்களே கீரை விவசாயம் செய்து, விற்பனையில் விவசாயிகளுக்கு விற்பனையில் கமிஷனும் தருவதாகக் கூறுகின்றனர். 

இணையம் மற்றும் நேரடி விற்பனை மூலமாக கீரைகளின் வகைகள் அதன் மருத்துவ குணங்கள் ஆகியவற்றை தெரிவிப்பது மட்டுமல்லாமல், தாங்கள் அறிந்திடாத மருத்துவ குணம் வாய்ந்த கீரைகள் அனைத்தும் ஓட்டுமொத்தமாக ஒரே இடத்தில் கிடைப்பதால் தாங்கள் வாங்குவதற்கு வசதியாக இருப்பதாகவும், இணையம் வழியாக ஆர்டர் செய்தால் நேரடியாக வீட்டுக்கு வந்து டெலிவிரி தருவது மிகவும் சிறப்பு என தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்... 

தற்போது 40 வகையான கீரைகள் வழங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் 100 வகையான கீரைகளைக் விற்பனைக்கு கொண்டுவருவது மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் கடையைக் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பல கனவுகளுடன் தெரிவிக்கிறார் ஸ்ரீராம் பிரசாந்த்.