வெள்ளி, 8 டிசம்பர், 2017

ஆம்புலன்ஸ் இல்லாததால் இறந்த மகளின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி எடுத்து சென்ற தந்தை! December 8, 2017

Image

ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா (GODDA) நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த மகளை தூக்கி செல்வதற்கு ஆம்புலன்ஸ் தராததால், அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் கட்டி எடுத்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. 

கோட்டா நகரில் உள்ள சதார் மருத்துவமனையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட 12 வயது மகள் லலிதா குமாரியை, தந்தை மகாதேவ் ஷா சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். 

ஆனால் சிகிச்சை பலனின்றி லலிதா குமாரி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்ல மகாதேவ் ஷா, மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். 

ஆனால் அவர்கள் அவசர ஊர்தியை கொடுக்காததால், தமது மோட்டார் சைக்கிளில் மகளின் இறந்த உடலை கட்டி எடுத்து சென்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.