கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, அரசு பேருந்தில் பயணித்த ஒருவர், திடீரென உயிரிழந்த நிலையில், சடலத்துடன் அவரது நண்பரை கீழே இறக்கவிட்டு சென்ற அவலம் அரங்கேறியது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களுருவிலிருந்து திருக்கோவிலூர் சென்ற அரசு பேருந்தில், கட்டிட தொழிலாளிகள் இருவர் ஏறியுள்ளனர் . திருக்கோவிலூர் செல்ல அவர்கள் டிக்கெட் எடுத்த நிலையில், சூளகிரி அருகே வரும்போது , ஒருவர் உடல் நிலை சரியில்லாததால் இறந்துவிட்டார்.
இதையறிந்த நடத்துனர் பேருந்தை நிறுத்தி , இறந்தவரின் சடலத்துடன் அவரது நண்பரை , சூளகிரி புறவழிச்சாலையில் இறக்கிவிட்டு பயணச் சீட்டையும் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். இதை அடுத்து மூன்று மணிநேரமாக இறந்த உடலுடன், திருக்கோவிலூர் செல்ல முடியாமல், சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காத்துக் கிடந்துள்ளார்.
இதை அறிந்த சூளகிரி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம், சொந்த ஊருக்கு உடலை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.