வியாழன், 11 ஜனவரி, 2018

புகையில்லா போகியை வலியுறுத்தும் ‘போகி பக்கெட் சேலஞ்’ - சேலத்தில் புதுமை! January 11, 2018

Image
புகை இல்லா போகியை கொண்டாடும் வகையில் சேலம் மாநகராட்சி  சார்பில் போகி பக்கெட் சேலஞ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, பயன்படாத பொருட்கள் மற்றும் பழைய துணி வகைகளை வீடுகளுக்கு முன்பு உள்ள கூடைகளில் போட மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

நிகழ்ச்சியின் தொடக்கமாக சேலம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் சதிஷ் இதனை துவக்கி வைத்து மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார். 

சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சேலம் மாநரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் முயற்சியில் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

போகி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில், புகை இல்லா போகியைக் கொண்டாட சேலம் மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, போகி தினத்தன்று, பழைய பொருட்களை எரிக்காமல், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அந்த பொருட்களை சேகரித்து மாநகராட்சிக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம், புகை இல்லாத போகி கொண்டாட முடியும் என்பதுடன், ஏழை எளிய மக்கள் பயன்பெறவும் முடியும் என சேலம் மாநகராட்சி தெரிவித்துள்ளது