நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில், ராணுவ சீருடை போன்ற ஆடைகளை பொதுமக்கள் அணிந்து செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது.
உதகை அருகே சிங்காரா வனபகுதியில் மர்ம நபர்கள் ராணுவ உடையை போன்று ஆடை அணிந்து துப்பாக்கிகளுடன் சென்றதாக தகவல் பரவியது.
இதனையடுத்து கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் ராணுவ சீருடை போன்ற கேமோபிலட்ச் ஆடைகளை பொதுமக்கள் அணி செல்வதற்கு நீலகிரி மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.
இந்நிலையில் வனப்பகுதியினுள் மவோயிஸ்ட் இயக்கத்தினர் நுழைய வாய்ப்புகள் உள்ளதாக உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நீலகிரி மாவட்ட வனபகுதிகளிலும், சோதனை சாவடிகளிலும் மவோயிஸ்ட் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் சிசிடீவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணிகளும் நடத்தபட்டு வருகிறது.