இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளை சுமந்துசெல்லும் பி.எஸ்.எல்.வி சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 1,323 கிலோ எடை கொண்ட 31 செயற்கைக்கோள்களை சுமந்து பி.எஸ்.எல்.வி சி-40 ராக்கெட் இன்று காலை 9.29 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது.
பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டில், 3 இந்திய செயற்கோள்களும், அமெரிக்கா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா மற்றும் பிரிட்டன் நாடுகளின் செயற்கைக்கோள்கள் 28ம் உள்ளன.
இதில் முக்கியமானதாக கருதப்படம் இஸ்ரோவின் கார்டோசாட் - 2, செயற்கைக்கோளின் எடை 710 கிலோ ஆகும். ராக்கெட் ஏவப்பட்ட 2.21 மணி நேரத்தில், பூமியில் இருந்து, 505 கி.மீ., உயரத்தில், புவிவட்டப் பாதையில் கார்டோசாட் - 2 செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும்.
கார்டோசாட் - 2 செயற்கைக்கோளில் துல்லியமாக படமெடுக்கும் கேமராக்களும், தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, பூமியின் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் இருந்து படமெடுத்து அனுப்பும்.
ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கிரண்குமார், நாட்டுக்கு புத்தாண்டு பரிசாக இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்தமுறை பி.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவப்பட்டபோது சில பிரச்சனைகள் இருந்ததாகவும், இந்த முறை அந்த பிரச்சனை கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் கிரண்குமார் தெரிவித்தார்.
பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் இந்த வெற்றி நாட்டில் உள்ள விவசாயிகள் , மீனவர்கள், மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்திற்கு பெரிதும் உதவும் என குறிப்பிட்டுள்ளார்.