வைரமுத்து ஒரு சிறந்த படைப்பாளி என்றும், மதக்கலவரங்களை உருவாக்கவே சிலர் தவறான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் சங்கம் கட்டுவதற்கு, இனிமேல் எந்த நிகழ்சிக்கும் நடிகர்கள் செல்லக்கூடாது என்றும், ஓகி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி அளிக்க, குழு அமைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஒருசில காரணங்களால் அச்சமடைந்துதான், ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும் மன்சூர் அலிகான் குறிப்பிட்டார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் மூலம் ஒன்றும் நடக்கபோவதில்லை எனவும் மன்சூர் அலிகான் விமர்சித்தார்.