இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள 4 மூத்த நீதிபதிகளும் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து பின்னணி தகவல்களை தற்போது பார்க்கலாம். நாட்டின் 45வது தலைமை நீதிபதியாக உள்ளார் தீபக் மிஷ்ரா. 1953ம் ஆண்டு அக்டோபர் மாதம் 03ம் தேதி ஒடிசா மாநிலத்தில் பிறந்தார் தீபக் மிஸ்ரா. 1977ம் ஆண்டு பிப்ரவரி 14ம்தேதி ஒடிசா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து தனது பணியை தொடங்கினார் மிஸ்ரா. 1996ம் ஆண்டு ஒடிசா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட தீபக் மிஸ்ரா 1997ம் ஆண்டு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2009ம் ஆண்டு பட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட மிஸ்ரா 2010ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2011ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி நாட்டின் 45வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.