வெள்ளி, 5 ஜனவரி, 2018

செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்! January 4, 2018

Image

அணுகுண்டு வெடிப்பினால் கூட பாதிப்படையாத கரப்பான்பூச்சி, செல்போன் கதிர்வீச்சினால் பாதிப்படையும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித்  தகவலை வெளியிட்டுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள யுனிவர்சிட்டி கல்லூரியில் நடந்த ஆராய்ச்சியில், செல்போனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு, கரப்பான்பூச்சியின் உடலில் அதிக மாற்றத்தை நிகழ்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ரத்த சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை செய்யும் ஹெமடாலஜி நிபுணர்கள், கரப்பான் பூச்சியின் ரத்தத்தில், செல்போனில் இருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சினை செலுத்திய பொழுது, உடம்பில் உள்ள சில அமிலங்களின் சுரப்பு அதிகமாகிவிட்டதாகவும், 3 மணி நேர கதிர்வீச்சிற்கு பிறகு, அதன் உயிர் மந்த நிலையை அடைந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தொடர் கதிர்வீச்சினால், கரப்பான்பூச்சியினுடைய மூளை, நியூரான்கள் மற்றும் அணுக்களின் வளர்ச்சி அதிகமாக பாதிப்படையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே செல்போன் டவர் அதிகமான காரணத்தினால், சிட்டுக்குருவி இனம் அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், செல்போன் கதிர்வீச்சினாலும் பல உயிரினங்கள் அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் தற்போதைய சூழல், மனிதர்கள் மட்டுமல்லாது சிறு உயிரினங்களான பூச்சிவகைகளின் உயிருக்குக்கும் ஆபத்தை விளைவிப்பதாக இருக்கிறது.

Related Posts: