வெள்ளி, 5 ஜனவரி, 2018

அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு எதிராக கட்டணத்தை நிர்ணயம் செய்த தொழிற்சங்கங்கள்! January 5, 2018

Image

கோவையில் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு எதிராக தொழிற்சங்கங்களே தன்னிச்சையாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்து, ஆட்டோக்களை இயக்க துவக்கியுள்ளனர்

ஆட்டோ மீட்டர் கட்டணமாக குறைந்தபட்சம் 25 ரூபாய் எனவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 12 ரூபாய் எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 
அரசு நிர்ணயித்தது.

இந்நிலையில், இக்கட்டணத்திற்கு எதிராக கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் தன்னிச்சையாக கூடுதல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர்.

குறைந்தபட்சம் 30 ரூபாய் எனவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 15 ரூபாய் எனவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்து, ஆட்டோக்களை நேற்று முதல் இயக்க துவக்கினர்.

Related Posts: