ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த பேச்சுவார்த்தையில், 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க, போக்குவரத்துத் தொழிலாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், 2.44 காரணி ஊதிய உயர்வு, என்ற அரசின் அறிவிப்பை ஏற்க தொழிற்சங்கத்தினர் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள், ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு, போராட்டத்தில் குதித்தனர். அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பு, தொழிலாளர்கள் இடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்பதால், வேலைநிறுத்தம் தொடரும் என்று அறிவித்துள்ள தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் அவதிப்படுவது குறித்து, அரசுக்கு கவலையில்லை என்றும் குற்றம்சாட்டினர்.