சிவகாசியில் 11-வது நாளாக நீடிக்கும் பட்டாசு ஆலை வேலைநிறுத்தத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதால் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விரைந்து முடிக்கக் கோரியும், மத்திய அரசு சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவரக் கோரியும் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த 26-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
800-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஆலைகள் 11வது நாளாக மூடப்பட்டுள்ளதால், நாள்தோறும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தத்தால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆலை உரிமையாளர்களிடம் முன் பணமும் வாங்க முடியாமல், வட்டிக்கும் பணம் வாங்க முடியாமலும் அவதிப்படுவதாக அவர்கள் கூறினர்.