வெள்ளி, 5 ஜனவரி, 2018

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு January 5, 2018

Image

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும், என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

பணிக்கு திரும்பாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள், என்றும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று முதல், அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், வேலைநிறுத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. இதில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அவதிப்படுவதாக, கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதியம் திருப்தியாக இல்லையென்றால். வேறு வேலையை பார்க்கலாம் என்றும், கருத்து தெரிவித்தார். 

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு, நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கவும், உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. மேலும், பணிக்கு வராத தொழிலாளர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், என்று எச்சரித்த தலைமை நீதிபதி, பணிக்கு வராத தொழிலாளர்கள் சஸ்பென்ட், டிஸ்மிஸ் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும், என்றும் எச்சரித்துள்ளார்.

Related Posts: