வெள்ளி, 5 ஜனவரி, 2018

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாவட்ட ஆட்சியர்! January 4, 2018

Image

அரியலூர் அரசு மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபிரியா, அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த 1ம் தேதி இரவு அரியலுார் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபிரியாவுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆட்சியருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மேலும், கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலும், ஓய்விலும் இருந்த ஆட்சியர் லட்சுமிபிரியா, இன்று சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். 

அப்போது மருத்துவர்கள், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ஆகியோர், அவருக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர், அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் உள்ள காரணத்தினால் தான், அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவித்தார். மேலும், சிறப்பு மருத்தவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளதால், பொதுமக்கள் அரசு பொதுமருத்துவமனைகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Posts: