திங்கள், 8 ஜனவரி, 2018

திராவிடர் கழகம் போராட்ட அறிவிப்பு! January 8, 2018

Image

மருத்துவத்துறையில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக, ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். 

கோவையில் திராவிடர் கழகத்தின் மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கி.வீரமணி, சட்டப்பேரவையில் ஆளுநர் நிகழ்த்திய உரை, தமிழக அமைச்சரவையில் தயாரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். 

தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாக செயல்படுவதாக கூறிய ஆளுநர், இதனை தமது ஆய்வுகளில் உறுதிப்படுத்தியுள்ளாரா என்றும் கேள்வி எழுப்பினார். போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது என்றும் கி.வீரமணி தெரிவித்தார். 

அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், மண்டல் கமிஷன் பரிந்துரைந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கோரியும் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் வீரமணி கூறினார்.

ஆன்மிக அரசியல் என்பது சொல்பவர்களுக்கும் புரியாது, கேட்பவருக்கும் புரியாது என்று கூறிய கி.வீரமணி, ஆன்மிகம் என்பது சாமியார் வேலை என்றும், ஆட்சி நடத்துவது அரசியல்வாதிகள் வேலை என்றும் இரண்டிற்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தார்.