செவ்வாய், 9 ஜனவரி, 2018

​மிக இளம் வயதில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள மதுரை மாணவி! January 9, 2018

Image


மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் மிக இளம் வயதில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். 

மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா ஜூலை மாதம் துருக்கியில் நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று உலக அளவில் 5-வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், அதேபோல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜூனியர் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் பல சாதனைகள் படைக்க தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.