கோடநாடு வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை வாரண்ட் இல்லாமல் கைது செய்தது தொடர்பாக சட்ட விளக்கத்தை அளிக்குமாறு அம்மாநில காவல் துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சயான், மனோஜ் ஆகியோரை சட்டவிரோதமாக கைது செய்த தமிழக காவல்துறை மீது நடவடிக்கை கோரி மேத்யூஸ் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நஜ்மி வஸ்ரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்டதில் உச்ச நீதிமன்ற வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என பத்திரிகையாளர் மாத்யூஸ் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
இதற்கு பதிலளித்த டெல்லி காவல்துறை, அவசரம் காரணமாகவே தமிழக காவல்துறையினர் வாரண்ட் இல்லாமல் இருவரையும் கைது செய்ததாகவும் 24 மணிநேரத்திற்குள் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி விட்டதாகவும் தெரிவித்தது. இதில் எந்த சட்ட மீறலும் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி இது குறித்து டெல்லி காவல்துறை விளக்கமளிக்க உத்தரவிட்டார்.
source: ns7.tv