வியாழன், 2 ஜனவரி, 2020

பாஜக தலைவர்கள் கைது...!

Image
பிரதமரை அவதூறாக பேசிய, நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடத்திய பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் ஒன்றில், சமீபத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி நெல்லை கண்ணன், பிரதமர் மோடி குறித்தும், உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் அவதூறாகப் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். இந்நிலையில், நெல்லை கண்ணன் கைது செய்யப்படாததைக் கண்டித்து, பாஜகவினர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு, போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன். ராதாகிருஷ்ணன் , ஹெச்.ராஜா, இல கணேசன், உள்பட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். அனுமதி இன்றி அவர்கள் போராடியதால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 
இந்நிலையில், பாஜகவின் மற்றொரு பிரிவினர், அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்லைக் கண்ணனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட வானதி சீனிவாசன் உள்பட, ஏராளமான பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

credit ns7.tv

Related Posts: