சனி, 4 ஜனவரி, 2020

ஊரகப் பகுதிகளின் செல்வாக்கை நாடிப் பிடித்து பார்ப்பதாக அமைந்துள்ளது.

Credit ns7.tv
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உணர்த்தும் முக்கிய அம்சங்கள், திமுக, அதிமுக கட்சிகளின் ஊரகப் பகுதிகளின் செல்வாக்கை நாடிப் பிடித்து பார்ப்பதாக அமைந்துள்ளது.
வழக்கின் மேல் வழக்கை சந்தித்து ஒருவழியாக ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளிவந்தவுடன், தொகுதி மறுவரையரை, புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தக் கூடாது உள்ளிட்ட பிரச்னைகளை சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்ற வாசல் ஏறியது திமுக கூட்டணி கட்சிகள். 
உள்ளாட்சி தேர்லை சந்திக்க திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு பயம் என்று அதிமுக தரப்பிலும், அதிமுக மக்களை ஜனநாயக முறையில் சந்திக்க திராணியில்லை என்றும் திமுகவும், மாறி,மாறிக் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு வந்தன. 
இந்நிலையில், உச்சநீதிமன்ற வழிமுறைகளை பின்பற்றி அறிவிப்பை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம். அதன் பின்னர், இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மே 27 மற்றும் 30ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிகையானது தொடங்கி, மறுநாள் வரை நீடித்தது. 
2011ம் ஆண்டிற்கு பிறகு ஊராகப் பகுதிகளுக்கு நடந்த இந்த தேர்தல், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவின் கிராமப்புறப் செல்வாக்கை நாடிப் பிடித்து பார்ப்பதாக அமையும் என்று அரசியல் விமர்சகர்களாள் கருதப்பட்டது. பாமக, தேமுதிக, பாஜக, கம்யூனிஸ்ட் ஆகிய இதர கட்சிகளும் தங்களின் செல்வாக்கையும் நிலைநிறுத்தும் முயற்சியாக இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஏழு அம்சங்களை உணர்த்துகிறது. முக்கியமாக தமிழகத்தின் ஊராகப் பகுதிகளில் இரண்டு திராவிட (திமுக, அதிமுக) கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தியுள்ளன. 
முடிவின் முக்கிய அம்சங்கள்
  • ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஏழு அம்சங்களை உணர்த்துகிறது. முக்கியமாக தமிழகத்தின் ஊராகப் பகுதிகளில் இரண்டு திராவிட (திமுக, அதிமுக) கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தியுள்ளன. 

  • திமுக, அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளால் பெரும்பான்மை பெறமுடியாமல் போனதை இந்த தேர்தல் சுட்டிக்காட்டுகிறது. 

  • சட்டமன்ற, மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக கவனம் பெறாத பாரதிய ஜனதா கட்சி கன்னியாகுமரியில் அதிமுக, திமுகவை பின்னுக்குத் தள்ளி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் முதலிடத்தை தக்கவைத்தது. 

  • பெரும்பான்மையான வட மாவட்டங்கள் இந்த தேர்தலை சந்திக்காத போது, பாட்டாளி மக்கள் கட்சி 3-வது இடத்தை பிடித்துள்ளது.

  • தமிழகத்தில் கம்யூனிஸ்ட் தனது செல்வாக்கை இழந்து வருகிறது என்பதற்கு மற்றொரு சான்றாக இந்த தேர்தல் வாய்ந்துள்ளது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே முழுமையான வெற்றியை ஈட்டவில்லை. மக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பின்னடவை சந்தித்துள்ளது.

  • மக்களவை தேர்தலில் விதைத்த அமமுக, ஊரகப் பகுதி தேர்தல் மூலம் தான் துளிர் விட ஆரம்பித்துள்ளது. 94 இடங்களில் வெற்றியை பதிவு செய்திருந்தாலும், 2 இடங்களில் மட்டுமே ஒன்றிய சேர்மன் பதவிகளை கைப்பற்றுகிறது அமமுக. 

  • பெரிய தலைவர்களின் பிரச்சாரங்கள் கிடையாது, மாநாடு போன்ற கூட்டங்கள் நடத்தப்படவில்லை, ஆனால் உள்ளுர் தலைவர்களின் பிரச்சாரங்கள் மட்டுமே வெற்றிக்கு கைகொடுத்துள்ளது.