ராணுவ அதிகாரி எனக் கூறி ஒருவர் அரங்கேற்றிய மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
ஆன் லைன் விற்பனை இணைய தளமான OLX ல் பிரமிள் குமார் என்பவர் விளம்பரம் ஒன்று செய்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவப் பிரிவில் வேலை பார்ப்பதாகவும் பணியிட மாறுதல் ஆகி வேறு மாநிலத்திற்கு செல்ல இருப்பதால் தான் பயன்படுத்திய ராணுவ இருசக்கர வாகனத்தை விற்க இருப்பதாகவும் அந்த விளம்பரத்தில் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் அந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். ராணுவ வாகனம் என்பதால் அதன் தரம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பிரமிள்குமாரை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களைக் கேட்டுள்ளார்.
அப்போது ராணுவத்தில் தான் வேலை பார்க்கிறேன் என்பதை உறுதி செய்யும் வகையில் ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மளிகை பொருள்களுக்கான அடையாள அட்டை, மதுபானம் வழங்குவதற்கான அடையாள அட்டை, மற்றும் ராணுவ சீருடையுடன் கையில் ஏ.கே. 47 துப்பாக்கி ஏந்தி நிற்பது போன்ற பல புகைப்படங்கள் ஆகியவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பாலமுருகனுக்கு அனுப்பிய பிரமிள்குமார், தான் ராணுவத்தில்தான் வேலை பார்க்கிறேன் என உறுதியாகக் கூறியுள்ளார்.
இதனை நம்பிய பாலமுருகன், ராணுவ இரு சக்கர வாகனத்தை வாங்குவதற்கு முதல் தவணை தொகையாக 5000 ரூபாயை பிரமிள்குமாரின் கூகுள் பே கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இதன் பின்னர் அந்த தொகைக்கு ராணுவ முத்திரையுடன் கூடிய ரசீதை பாலமுருகனுக்கு பிரமிள் குமார் அனுப்பி வைத்துள்ளார். அந்த ரசீதை பார்த்த பாலமுருகனுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் மறுநாள் காலையில் எழுந்து தன்னுடைய செல்போனை பார்த்த பாலமுருகன் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் அவரது கூகுள் பே கணக்கில் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பாலமுருகன் தன்னுடைய பணம் யாருடைய வங்கிக் கணக்கிற்கு சென்றது என்பதை நண்பர் ஒருவரின் செல்போன் மூலம் கண்டுபிடிக்க முயன்றுள்ளார். நண்பரின் செல்போனில் இருந்து
பிரமிள்குமாரை OLX மூலம் தொடர்புகொண்ட போது, தனக்கு அனுப்பிய அடையாள அட்டைகளை நண்பரின் செல்போன் எண்களுக்கும் அனுப்பியிருந்ததைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தார். ராணுவ வீரர் என்ற பெயரில் பிரமிள் குமார் என்பவர் மோசடியை அரங்கேற்றியது தெரிய வந்தது. தன்னைப் போலவே எட்டுக்கும் மேற்பட்டோரை பிரமிள்குமார் ஏமாற்றிய அதிர்ச்சித் தகவலும் பாலமுருகனுக்கு தெரிந்தது. இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புகார் அளித்துள்ளனர். ராணுவர் வீரர் எனக் கூறி OLX இணைய தளத்தில் ஒருவர் அரங்கேற்றிய மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

credit ns7.tv