ஞாயிறு, 12 ஜனவரி, 2020

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம்- பிரதமரின் தந்தை பிறப்பு சான்றிதழை காட்டுங்கள் - அனுராக் காஷ்யப்


பாலிவுட்டின் மிக முக்கிய தயாரிப்பாளரும் நடிகருமான அனுராக் காஷ்யப் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து ட்விட்டரில் பதிவிடுவது மட்டுமல்லாமல், களத்திலும் அச்சட்டத்திற்கு எதிராக மிக தீவிரமாக இயங்கி வருகிறார்.
தற்போது பிரதமர் மோடி முதலில் அவரது தந்தையின் பிறப்பு சான்றிதழை காட்ட வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனுராக் காஷ்யப்-ன் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் பிரதமரின், அரசியல் அறிவியல் ( PoliticalScience) பட்டத்தை நான் காண விரும்புகிறேன்; முதலில் பிரதமர் மோடி கல்வி அறிவுள்ளவர் என்பதை நிரூப்பிக்கட்டும்; பின்னர் பேசுவோம் என தெரிவித்துள்ளார். 
जितना भी यह भक्त और IT Cell वाले गाली दें,डराएँ,धमकाएँ,झूठ फैलाएँ,और बोलें की अब क्या करोगे,अब तो हो गया CAA लागू।इसका मतलब कि इन सब के ऊपर जो बैठे हैं दोनों , शाह/मोदी और उनकी भाजपा,वो तुमसे डर गए हैं।पीछे नहीं हटना है।झंडा हाथ में उठा के इन को बताना है,देशद्रोही वो हैं।हम नहीं।
இதைப் பற்றி 14.6ஆ பேர் பேசுகிறார்கள்
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது, "முதலில் பிரதமர் மோடியிடம் அவரது தந்தை மற்றும் குடும்பத்தின் பிறப்புச் சான்றிழை நாட்டிற்கு காட்டச் சொல்லுங்கள். பின்னர் எங்கள் ஆவணங்களை கேளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகமான பெலூர் மடத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு இன்று காலை துறவிகளை சந்தித்த அவர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் நோக்கில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்படவில்லை; குடியுரிமையை வழங்குவதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், அரசியல் ஆதாயம் தேடுவோர் குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க மறுப்பதாகவும், அவர்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

credit ns7.tv