ஞாயிறு, 12 ஜனவரி, 2020

தொழில்நுட்பத்தை நாடும் நீதித்துறை!

நீதித்துறையில் Artificial intelligence முறையை பயன்படுத்துவதற்கான சாத்தியகூறுகளை ஆய்வு செய்து வருவதாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளார்.
நீதி வழங்குவதில் தாமதம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என கூறியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதித்துறையில் தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க திறமையையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவது அவசியம் என தெரிவித்தார். 
Bobde
இதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial intelligence முறையை பயன்படுத்துவது தொடர்பான, சாத்தியகூறுகளை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் விரைவாக நீதி வழங்குவதை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

credit ns7.tv