நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி அவதூறாக பேசியதாக தமிழறிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நெல்லை கண்ணன் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுவதாகவும், பேசுவதே குற்றம் என்று வைத்துக் கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
credit ns7.tv