குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உதய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டாலும், அதனை தங்களது மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளன. இந்த சட்டத்தை அமல்படுத்துவது மாநில அரசுகளின் கடமை எனவும், ஒருவேளை சட்டத்தை அமல்படுத்தவிட்டால், 356-ஆவது சட்டத்தப்பிரிவின்படி, அந்த மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்படும் என பாஜக எம்.பி. உதய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv