நடப்பு கணக்கு பற்றாக்குறை ஜிடிபியில் 0.9% ஆக குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2019-20 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை - செப்டம்பர்) நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை (current account deficit) மொத்த உள்நாட்டு உற்பத்தியான GDPயில் 0.9% ஆக குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 0.9% ஜிடிபி என்பது 6.3 மில்லியன் டாலர்களாகும் அதாவது இந்திய மதிப்பில் இது சுமார் 44,000 கோடி ரூபாயாக உள்ளது.
இது முந்தைய காலாண்டில் 2.0% ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2.9% ஆக இருந்தது.
அதே போல கடந்த 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் 95.8 பில்லியன் டாலர்களாக இருந்த வணிக பற்றாக்குறை இந்த நிதியாண்டின் அந்த காலகட்டத்தில் 84.3 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.
credit ns7.tv