ஞாயிறு, 15 மார்ச், 2020

மத்திய அரசை கண்டித்து அதிமுக அரசு பயப்படுகிறது: திருநாவுக்கரசர் எம்.பி

Image
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். 
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மூன்று ரூபாயை உயர்த்தி இருப்பதன் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என தெரிவித்தார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 12 மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதேபோல் தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

மத்திய அரசை கண்டித்து அதிமுக அரசு பயப்படுவதாக விமர்சித்த அவர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
credit ns7.tv