credit ns7.tv
சென்னை மண்ணடியில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை மண்ணடியில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், போராட்டத்தின் தொடக்கத்திலேயே உங்களை நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்றும் நினைத்ததாகவும், அப்படி சந்தித்திருந்தால் திமுக தூண்டிவிட்டு தான் இந்த போராட்டம் நடப்பதாக கூறுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்ற மறுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னரே திமுக குரல் கொடுத்ததாகக் கூறிய மு.க.ஸ்டாலின், நாடு முழுவதும் இதற்கு எதிராக போராட்டம் நடந்து வருவதாக குறிப்பிட்டார்.