டெல்லியில் கலவரம் நடந்த பகுதிகளில், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பிக்கள் குழு ஆய்வு நடத்தியது.
டெல்லியில் நான்கு நாட்களாக நடைபெற்ற கலவரத்தில், 47 பேர் உயிரிழந்தனர். இதில், 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில், பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில், ஆய்வு மேற்கொள்ள காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டது.
ராகுல் காந்தி தலைமையிலான குழு, வன்முறை நடந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. பிரிஜ்புரி பகுதியில் சூறையாடப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, வெறுப்புணர்வும், வன்முறையும் இந்த பள்ளியை அழித்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதுபோன்ற வன்முறைகளால் பாரத மாதாவிற்கு எந்த பயனும் இல்லை, என தெரிவித்த ராகுல் காந்தி, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும், என வலியுறுத்தினார்.
credit ns7.tv