வியாழன், 5 மார்ச், 2020

கீழடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் தமிழர் வரலாறு...!

Image
கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் எச்சங்கள் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 5 கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்போது 6ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 பழங்கால செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், சிகப்பு நிற பானை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தார்கள் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அது தற்போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கீழடியில் இதுவரை 3 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
credit ns7.tv