புதன், 4 மார்ச், 2020

பிரதமர் மீது லோக்பாலில் புகார் அளிப்பது எப்படி? விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு! இந்தியர் அல்லாதோரும், தன்னுடைய பாஸ்போர்ட் நகலை உடன் இணைத்து, புகார்களை பதிவு செய்யலாம்.

நாட்டின் முதல் லோக்பால் அமைக்கப்பட்டு ஒருவருடம் ஆன நிலையில், லோக்பாலின் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள், முன்னாள், இந்நாள் பிரதமர்கள் மீதான குற்றச்சாட்டுகளை இந்த அமைப்பு விசாரணை நடத்தும். முழுமையான அமர்வு, புகார் வந்த உடனே, அந்த புகாரினை விசாரிக்கலாமா என்பது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தும். இந்த புகார்களை, அந்த விசாரணைக்குழு ஆரம்பத்திலேயே நிராகரித்து விட்டால், அந்த புகார்கள் தொடர்பான தரவுகளை லோக்பால் வெளியிடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் (Ministry of Personnel, Public Grievances and Pensions) திங்கள் கிழமையன்று (02/03/2020) , லோக்பாலில் எப்படி புகார்களை பதிவு செய்வது என்பது தொடர்பான நடைமுறைகளை அறிவித்தது. பிரதமருக்கு எதிராக தொடரப்படும் வழக்குகளை விசாரிக்கலாமா, வேண்டாமா என்பதை, லோக்பால் தலைவர் தலைமையிலான அமர்வு முடிவு செய்யும். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் விசாரணைக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே பிரதமர் மீதான வழக்குகளை விசாரிக்க முடியும்.
இந்த சட்டத்தின் 14வது பிரிவின், உட்பிரிவு (1)-ன் (a) பிரிவில் அரசு ஊழியர்களுக்கு எதிராக அளிக்கப்படும் புகார்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே சட்டத்தின் உட்பிரிவி (1)-ன் பிரிவு (a)-வின் துணைப்பிரிவு (ii)-ன் கீழ் முழுமையான விசாரணை அமர்வின் முடிவுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அட்மிஷன் ஸ்டேஜினை பிரிவு 7-ல் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த சட்டத்தின் பிரிவு 14 (1) (ii)-ன் கீழ், இந்த விசாரணைகள் கேமரா மூலம் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்கிறது. இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவது குறித்து லோக்பால் முடிவு எடுக்கும் பட்சத்தில் அந்த கேமரா பதிவுகள் வெளியிடப்படமாட்டாது.  மத்திய அமைச்சர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் மீது புகார்கள் வந்தால், இந்த புகார்களை விசாரிக்கலாமா வேண்டாமா என்பதை 3 பேருக்கும் குறையாத அமர்வு முடிவு செய்யும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் “லோக்பால் அலுவலகம் முழுமையாக இன்னும் செயல்படவில்லை. புகார்களை வாங்குவதற்கு முறையான செயல்வடிவத்தினை பெறுவதற்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக anti-corruption ombudsman காத்திருப்பதாக செய்தி வெளியிட்டது.
புதிதாக அறிவிக்கப்பட்ட செயல்வடிவத்தின் படி, ஓய்வுபெற்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஸ், லோக்பாலின் விசாரணை குழுவிற்கு புகார்களை அனுப்பலாம். ப்ரைமா ஃபேஸி வகை புகார்கள் வரும் பட்சத்தில், அந்த புகாரினை விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரை செய்யலாம். புகார் அளிக்கும் நபரின் பாதுகாப்பினை உறுதி செய்வதாக அறிவித்திருக்கிறது அரசு. விசாரணை முடிவடையும் வரையில் புகார்தாரரின் அடையாளம் வெளியிடப்படாது.
ஒரு புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் புறக்கணிப்பதற்கான காரணங்களையும் லோக்பால் நடைமுறைகள் தெளிவுப்படுத்தியுள்ளது. அதன்படி புகார்களின் உள்ளடக்கங்கள் தெளிவற்றவையாகவும், அற்பத்தனமாகவும், புகாரில் அரசு ஊழியர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்படாத போதும், அல்லது நீதிமன்றம் (அ) தீர்ப்பாயத்தின் கீழ் விசாரணையில் இருக்கின்ற புகார்களையும் லோக்பால் விசாராணை செய்யாது என்று அறிவித்துள்ளது.
மின்னஞ்சல் வழியாக அளிக்கப்படும் புகார்கள் 15 நாட்களில் சமர்பிக்கப்படும். கடற்படை சட்டம், ராணுவ சட்டம், விமானப்படை சட்டம், அல்லது கடலோர காவல்ப்படைச் சட்டத்தின் கீழ் புகார்களை அளிக்க முடியாது. மேலும் இந்தியர் அல்லாதோரும், தன்னுடைய பாஸ்போர்ட் நகலை உடன் இணைத்து, புகார்களை பதிவு செய்யலாம்.
credit indianexpress.com