மத்திய பிரதேசத்தில் இன்றைக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் கமல்நாத்துக்கு அந்த மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த மாநில ஆளுநர் லால்ஜி டான்டன், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த, கமல்நாத் அரசுக்கு உத்தரவிட்டார். நேற்று மத்திய பிரதேசத்தில், ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. ஆனால் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படமால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து சட்டப்பேரவையில் தனது பலத்தை இன்றைக்குள் நிரூபிக்க வேண்டும் என கமல்நாத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டார். அப்படி இல்லாவிட்டால் ஆட்சியை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். இதைதொடர்ந்து நேற்று இரவு ஆளுநரை கமல்நாத் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், சட்டத்திற்கு உட்பட்டு அனைத்தும் செய்ய தயாராக உள்ளதாக கூறினார்.
credit ns7.tv