சனி, 14 மார்ச், 2020

வண்ணாரப்பேட்டையில் CAA எதிராக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று மநீம நிர்வாகிகள் ஆதரவு! March 14, 2020

Image
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிககள் நடிகை ஸ்ரீபிரியா, கமிலா நாசர் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை ஒட்டி தேசியக் கொடியுடன் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளான நடிகை ஸ்ரீபிரியா, கமிலர் நாசர், மௌரியா உள்ளிட்டோர் நேரில் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இன்று நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், நாம் சந்திக்கும் ஒவ்வொரு கணமும் புதிய வாய்ப்பாக இருக்க வேண்டும்; நாம் சந்திப்பதை தமிழகத்தை செதுக்கும் வாய்ப்பாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; மீண்டும் நாம் சந்திப்போம் என்று சொல்லமாட்டேன்; சந்தித்தே ஆக வேண்டும் என தெரிவித்தார்.
credit ns7,tv

Related Posts: