உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 95,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 3,300ஐ கடந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இறைச்சி விற்பனை சந்தை ஒன்றில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படும் நிலையில் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது.
சீனாவில் அதன் தாக்கம் குறையத்தொடங்கியுள்ள நிலையில் பிற நாடுகளில் அதன் பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
அண்டார்டிகா தவிர்த்து உலகின் அனைத்து கண்டங்களில் உள்ள நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் தென் கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகள் மிக மோசமான நிலையை சந்தித்துவருகின்றன.
இந்தியா:
இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் விவரம்:
ராஜஸ்தான் - 17 (இத்தாலியர்கள் - 16 | ஓட்டுநர் - 1)
உத்தரபிரதேசம் - 7 (ஆக்ரா - 6 | காசியாபாத் - 1)
கேரளா - 3
கேரளா - 3
டெல்லி - 1
தெலங்கானா - 1
ஹரியானா - 1 (இத்தாலியிலிருந்து திரும்பிய PayTm ஊழியர்)
இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள 16 பேர் கொண்ட இத்தாலியர்கள் குழு குறைந்தபட்சமாக 215 பேரிடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஈரான்:
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், இந்த பிராந்தியத்திலேயே ஈரானில் அதிக அளவாக 107 பேர் அங்கு பலியாகியுள்ளனர்.
இத்தாலி:
இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர், அங்கு பலி எண்ணிக்கை 107ஆக உயர்ந்தது.
இன்று முதல் மார்ச் 15 வரை இத்தாலியில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியா:
கொரோனா வைரஸ் பாதிப்பு அண்மையில் தென் கொரியாவில் மிக அதிகமாக வளர்ந்துள்ளது. இதுவரை 35 பேர் பலியாகியிருக்கும் நிலையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,700ஐ கடந்துள்ளது.
தென் கொரியாவில் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையில் பாதியளவு அங்குள்ள Shincheonji என்ற மத குழுவுடன் தொடர்புடையதாக தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தென் கொரியாவிற்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் தென் கொரிய அதிபர் மூன்-ஜே-இன்-ற்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் கடிதம் அனுப்பியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான தென் கொரியர்களின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என வட கொரிய அதிபர் கடிதத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா:
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்தது.
வாஷிங்டன், ஃபுளோரிடாவையடுத்து கலிபோர்னியா மாகாணத்திலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
credit ns7.tv