புதன், 4 மார்ச், 2020

How To Save your Income Tax

வருமான வரி சேமிப்பு குறிப்புகள்: உங்கள் வரி விலக்கை குறைக்க ஐந்து வழிகள் How To Save your Income Tax : உங்களுடைய முதலாளியிடம் நீங்கள் உங்களுடைய எந்த முதலீட்டு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் அதை வருமான...
Income tax saving tips: வரி சேமிப்பு பருவம் முடியப்போகிறது. இன்னும் நீங்கள் இறுதிப் பேருந்தை பிடித்துவிடலாம் என்று காத்துக் கொண்டிருந்தால், வரி சேமிப்பு முதலீடுகளை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். PPF, NSC, ELSS, Ulips, ஆயுள் காப்பீட்டு endowment திட்டங்கள், term காப்பீடு திட்டங்கள் உட்பட பல்வேறு வரி சேமிப்பு முதலீடுகள் இருந்தாலும், தேர்வு உங்களது நீண்ட கால நோக்கத்தை பூர்த்தி செய்வதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். வரி சட்டங்களில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களை மனதில் கொண்டு ஐந்து முக்கியமான வரி சேமிப்பு முதலீடுகள் பற்றி பார்ப்போம்.
வழக்கமான பங்களிப்புகள்
2020-2021 ஆம் நிதி ஆண்டில் புதிய வரி முறை விருப்பபடியானது. நீங்கள் அதை தேர்வுசெய்தால் நடப்பு நிதியாண்டு 2019-20 க்கான வரி சேமிப்பாளரின் தேர்வு மிக கவனமாக செய்யப்பட வேண்டும். ஆயுள் காப்பீடு திட்டங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க நேர்ந்தால் காப்பீட்டு கட்டணத் தொகைக்கான வரி நன்மை உங்களுக்கு அடுத்த நிதியாண்டுக்கி இருக்காது.
வரி சேமிப்பு பரஸ்பர நிதி
வரி சேமிப்பு பரஸ்பர நிதி அல்லது ELSS என்பது இன்னும் பொருத்தமான சந்தையோடு இணைந்த பணவீக்கம் சரிசெய்யப்பட்ட நீண்ட காலத்துக்கான வருமான தேர்வாக இருக்கலாம். அவற்றின் குறுகிய கால வருவாயை பார்பதை விடுத்து நிலையான நீண்ட கால செயல்திறன் உள்ள ஒன்று அல்லது இரண்டு ELSS திட்டங்களை தேர்வு செய்யுங்கள்.
வீட்டு கடன் எடுத்துக் கொள்வது
நீங்கள் உங்களுடைய முதல் வீடு வாங்குவதற்காக வீட்டுக் கடன் வாங்கலாம் என்று யோசித்தால் பிரிவு 80EEA படி அதற்கு வரிச் சலுகைகள் உள்ளன.
வரி இல்லா பொருட்களில் வரி சேமிப்பு
2020-2021 நிதியாண்டில் நீங்கள் புதிய வரி முறையை தேர்ந்தெடுத்தால் உங்களுடைய சேமிப்பை வரி இல்லா முதலீடுகளில் முதலீடு செய்வது சிறந்தது. உங்களுடைய சேமிப்பை PPF, ELSS, ulips, SSY மற்றும் அதுபோன்ற முதலீடுகளில் பல்வகைப்படுத்தி முதலீடு செய்தால் அதிலிருந்து கிடைக்கும் வருவாய் வரி இல்லாதது அது உங்கள் வரி கடனில் சேராது.

முதலீட்டு சான்றுகள்
உங்களுடைய முதலாளியிடம் நீங்கள் உங்களுடைய எந்த முதலீட்டு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் அதை வருமான வரி கட்டும் போது அதை கோரலாம். மேலும் மார்ச் 31 வரை நீங்கள் கொடுக்கும் நன்கொடைகளுக்கும் வரி விலக்கு பெறலாம்.