தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் மாதம் தொடங்கி 45 நாட்களுக்கு நடைபெற உள்ளன. இந்தப் பணியானது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைக் கொண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான ஆயத்தப் பணிகளை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கவும், வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் 2021ஆம் ஆண்டு வெளியிடப்படும் எனவும் வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.