வெள்ளி, 6 மார்ச், 2020

NPR - ? எச்சரிக்கை செய்த நிலைக்குழு ஒவ்வொரு வீட்டினையும் நேரில் சென்று பார்வையிடாமல்

என்.பி.ஆர் : மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை நீக்குங்கள்... இல்லையேல்? எச்சரிக்கை செய்த நிலைக்குழு ஒவ்வொரு வீட்டினையும் நேரில் சென்று பார்வையிடாமல் இந்த கணக்கெடுப்பிற்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாது - உள்துறை அமைச்சகம்
Deeptiman Tiwary
NPR Parliament Stand Committee recommendations to the centre : என்.பி.ஆரில் சர்ச்சைக்குரிய கேள்விகளை நீக்க முற்றிலும் மறுத்துவிட்டது மத்திய அரசு. இந்நிலையில் ”பாராளுமன்ற நிலைக்குழுவிடம் இந்த கேள்விகள் ஏற்கனவே வந்த என்.பி.ஆரிலும் இடம் பெற்றிருந்தது. இது நிச்சயமாக அரசாங்கத்தின் பேக்-என்ட் டேட்டா புரோசசிங்கிற்கு உதவும்” என்று அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். ஆனால் நிலைக்குழு ”மத்திய அரசால் இந்த திட்டம் தொடர்பாக ஒருமித்த கருத்தினை உருவாக்க முடியவில்லை என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்காமல் போவதற்கான அபாயம் நிலவுவதையும் கவனித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து என்.பி.ஆர். மக்கள்தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இடம் பெற்றிருக்கும் கேள்விகளுக்கு எதிராக, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் (ஜெ.டி.யு மற்றும் எல்.ஜி.பி) உட்பட பல்வேறு மாநில அரசுகள் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.  உள்துறை அமைச்சகம் சமர்பித்த அறிக்கையில் “2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை பதிவேட்டின் போதும், வீட்டில் இருந்த பெற்றோர்களின் பிறந்த தேதி, இடம் ஆகியவை குறித்து கணக்கிடப்பட்டது. இறந்து போனவர்கள் மற்றும் வேறு இடங்களில் குடியிருக்கும் பெற்றோர்களின் பெயர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டத். பேக்-என்ட் ப்ரோசசிங்கிற்காகவும், பிறந்த தேதி மற்றும் இடம் ஆகிய தகவல்களை சேமிப்பது, என்.பி.ஆரை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைகுழுவின் பரிந்துரை
சில மாநிலங்களில் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அரசு ஒருமித்த கருத்துகளை உருவாக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் மக்கள் மத்தியில், வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்.பி.ஆரால் அச்சம் மற்றும் அதிருப்தி நிலவி வருகிறது. ஊடகங்கள் அந்த அச்சத்தை முறையாக வெளியிட்டிருக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஒரு பிரச்சனையும் இன்றி சீராக நடைபெற உள்துறை அமைச்சகம் சில வழிகளை கண்டறிந்திருக்க வேண்டும் என்று அக்குழு கூறியுள்ளது.  பல்வேறு மாநிலங்களில் என்.பி.ஆர் முறையாக நடைபெறுவதில் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு எனவும் அக்குழு கூறியுள்ளது.
முடிவில், தேசம் முழுவதும் ஒருமித்த கருத்துகளை உருவாக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது. மேலும் ஏப்ரல் மாதத்தில் துவங்க இருக்கும் என்.பி.ஆர்.குறித்து எழுந்துள்ள அனைத்து பிரச்சனைகள் தொடர்பாக முடிவுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கையை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தரவேண்டும். மக்கள் மத்தியில் இந்த திட்டங்கள் குறித்து எந்தவிதமான அதிருப்தி மற்றும் அச்சம் உருவாகாததை உறுதி செய்யவேண்டும். அப்போது தான் இந்த திட்டங்கள் முறையாக, அமைதியான முறையில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் பயோமெட்ரிக் அடையாள தரவுகளை சேமிக்கும் முறை ஆகியவை குறித்து கேள்வி எழுப்பியது. ஆனால் மத்திய அரசு 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் பயோமெட்ரிக் பயன்படுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்.பி.ஆர் கணக்கெடுப்பு முயற்சிகள் மற்றும் செலவினங்களை தடுப்பதற்காக, புதிய பயிற்சியை மேற்கொள்ளாமல் என்.பி.ஆர் புதுப்பிக்க ஆதார் தரவுத்தளத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு கேட்டது.
இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சகம் “புதிய என்.பி.ஆர் உருவாக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த என்.பி.ஆரில் மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மேலும் என்.பி.ஆரின் தேவையை ஆதார் கார்ட் பூர்த்தி செய்யாது. டூப்ளிகேசன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆதார் என்பது தனிநபர் தரவு ஆனால் என்.பி.ஆர் என்பது ஒரு குடும்பத்தின் தரவு. ஒவ்வொரு வீட்டினையும் நேரில் சென்று பார்வையிடாமல் இந்த கணக்கெடுப்பிற்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாது. மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்கள் குடும்பங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. எனவே என்.பி.ஆர் அதற்கு உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  இந்த விளக்கத்தினை ஏற்றுக்கொள்ளாத நிலைக்குழு, என்.பி.ஆர் அப்டேட்டுகளுக்கு ஆதார் தரவு தளத்தை பயன்படுத்த மத்திய அரசு முயலவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
credit indianexpress.com