சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யுங்கள் உத்தரவு நிறுத்தி வைப்பு! திருப்பூர் போராட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த கோபிநாத் மீது ஏற்கனவே குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்
CAA protests high court puts interim ban : அனுமதி இல்லாமல் திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் எந்த போராட்டமும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய திரூப்பூர் காவல்துறைக்கு நேற்று பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், காவல்துறை அனுமதியின்றி திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்தும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை தடுக்க கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, தாங்கள் விருப்பப்படும் இடங்களில் போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு உரிமையில்லை என்றும், அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க காவல் துறையினருக்கு எந்த தடையும் இல்லை என்றும் விளக்கமளித்தனர். மேலும், காவல்துறை அனுமதியில்லாமல் திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அமைதியான முறையில் போராடிவரும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதை திரும்ப பெற வேண்டுமென வழக்கறிஞர்கள் வைகை, மோகன், என்.ஜி.ஆர்.பிரசாத், முபீன், ராஜா முகமது உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர். திருப்பூர் போராட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த கோபிநாத் மீது ஏற்கனவே குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் நேற்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வைத்து மதுரையில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களை மிரட்டும் வகையில் காவல்துறையின் செயல்படுகின்றனர். நோட்டீஸ் அளித்துள்ளனார் என தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் நேற்று நாங்கள் பிறப்பித்த உத்தரவு என்பது அந்த மனுவிற்கு மட்டுமானது தான் எனவும், மொத்தமாக தமிழகம் முழுவதுக்கும் என நாங்கள் எங்கும் தெரிவிக்கவில்லை முதலில் அந்த உத்தரவை படித்துப் பாருங்கள் என தெரிவித்தனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் மீது மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும். அதற்கு ஆதரவாக நடைபெற்றும் போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிவித்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், அனுமதியில்லாத அனைத்து போராட்டம் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தார்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டம் தொடர்பான வழக்கில் நேற்று பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டனர். மேலும் வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினம் அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைக்கலாம் என நீதிபதிகள் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அப்போது அரசு வழக்கறிஞர் குறுக்கிட்டு அனுமதியிற்றி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தங்கள் விளக்கத்தை பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
credit indianexpress.com