தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகமும் தப்பவில்லை. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
ஒரே நாளில் பாதிக்கப்ட்ட 75 பேரில், 74 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தமிழகம் இந்தியளவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.மேலும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த சென்னையை சேர்ந்த நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டமும் இணைந்து தற்போது தமிழகத்தில் இதுவரை 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,103 பேரில் 264 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளனவர்கள் சீரான உடல் நிலையில் இருப்பதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிய 6 புதிய ஆய்வகங்கள் வரவுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி அனைவருக்கும் சோதனை செய்யும் நிலை எழவில்லை என்றும், இதுவரை 86,342 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும், 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஒரு ரயில்வே மருத்துவர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் அளித்துள்ளார்.
credit ns7.tv