வெள்ளி, 3 ஏப்ரல், 2020

தமிழக அரசின் சார்பில் சலுகைகள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோய் பரவலை எதிர்கொள்ளும் விதமாக மருத்துவத்துறையினருக்கு ஆதரவை தரும் விதமாக மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசின் சார்பில் சலுகைகள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilators), N95 முக கவசங்கள், கொரோன நோய் தடுப்புக்கான வைரஸ் எதிர்ப்பு மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள், ஹைட்ராக்சிக் குளோரோ குவினோன்ம் அசித்ரோமைசின் வைட்டமிந்சி (மாத்திரை மற்றும் திரவ வடிவில்), தனிநபர் பாதுகாப்பு கவச உடை (PPE), ஐசியு மானிட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அல்லது புதிதாக ஜூலை 31ம் தேதிக்குள் உற்பத்தி செய்ய துவங்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பின்படி:
1. சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இச்சலுகைகள் பொருந்தும்.
2. தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு மொத்த மூலதனத்தில் 30% மூலதன மானியம், 20 கோடி ரூபாய் உச்சவரம்பாக கொண்டு 5 ஆண்டு காலத்திற்கு சம தவணைகளாக பிரித்து வழங்கப்படும்.
3. மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து நிறுவனங்களும் திட்ட அனுமதி உட்பட அனைத்து வித அனுமதிகளும் பெறுவதற்காக காத்திருக்காமல் உடனடியாக உற்பத்தியை துவக்கலாம். பின்னர் அனுமதிகளை பெற்றுக்கொள்ளலாம். இவை அனைத்திற்கும் ஒற்றை சாளர அனுமதி வழங்கப்படும்.
4. இத்தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப குறுகிய கால அல்லது நீண்ட கால குத்தகை அடிப்படையில் சிப்காட், சிட்கோ நிறுவனங்களின் மூலம் முன்னுரிமை அடிப்படையில் நிலம்/ கூடாரங்கள் வழங்படும்
5. 100 சதவீத முத்திரைத் தாள் கட்டண விலக்கு வழங்கப்படும்
6. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் செயல்பாட்டு மூலதன கடனிற்கான வட்டியில் 6%ஐ இரண்டு காலாண்டுகளில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் மானியம் வழங்கப்படும்
7. அடுத்த 4 மாதங்களில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகளில் குறைந்தபட்சம் 50% தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கொள்முதல் செய்யும்.
8. இந்த நிறுவனங்களுக்கு NEEDS திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்க முன்னுரிமை
credit ns7.tv