வங்கக்கடலில் உருவான ‘புரெவி’ புயல், திரிகோணமலைக்கு 300 கி.மீ, கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும், பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் கரையைக் கடக்கும்போது 95 கி.மீ. வேகத்தில் காற்றுவீச வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 6 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடந்த பின் புரெவி புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வரும் என்றும் நாளை மறுநாள் அதிகாலை குமரி-பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புயல் கரையைக் கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 02/12/2020
புதன், 2 டிசம்பர், 2020
Home »
» பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
By Muckanamalaipatti 9:33 AM