1996ம் ஆண்டில் இருந்து ரஜினி தான் அரசியலுக்கு வர இருப்பதாக கூறிக் கொண்டே இருந்தார். ஆனால் கட்சியின் பெயர் குறித்தோ அதன் கொள்கைகள் குறித்தோ, தேர்தலில் போட்டியிடுவாரோ என்பது குறித்தோ எந்த தகவலும் இருந்ததில்லை. ஆனால் 2017ம் ஆண்டுக்கு பிறகு தீவிரமாக அரசியல் குறித்து தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வந்தார். அவ்வபோது நடைபெறும் ஆலோசனை கூட்டங்களும், கருத்துகளும் தலைப்பு செய்தியாக மாற, கட்சி எப்போது துவங்குவார் என்பது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில் இன்று 2021ம் ஆண்டு ஜனவரியில் கட்சி துவங்கப்படும். அதற்கான தேதி டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.
சாமானியர்கள் பார்வை? :
இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், ரஜினி-யை யாரோ இயக்குவதாகவே தெரிகிறது, மேலும் ரஜினிக்கு ஒரு நிலையான, தெளிவான, அரசியல் சிந்தனை இருக்குமா என்பது பொதுமக்களின் எண்ணம். அரசியல் வருவதாக கூறிய காலம் முதல் இன்று வரை ....அவருடைய பேச்சில் ஒரு தெளிவில்லை....சினிமாவில் வரும் காட்சி போல், சிஸ்டம் சரியில்லை, ஆன்மிக அரசியல், மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல, போன்ற வசனம் திரைக்கு வேண்டுமென்றால் மெருகூட்டப்பட்டதாக இருக்கலாம், மக்களின் மனநிலை வேறு, மக்களின் பிரச்சனைக்கு தக்கநேரத்தில் அவர் குரல் கொடுத்ததில்லை, அவ்வாறு கொடுத்தாலும்,அதில் தெளிவுமில்லை, இப்படிப்பட்டவரின் தலைவனாக ஏற்பது திராவிட மண், அதற்கே உண்டான பகுத்தறிவில், தனது தலைவனை தேர்வுசெய்யும்.
இந்தியாவே குலுங்கும் அளவிற்கு, விவசாயிகள் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது, கொரோன தொற்றால் மக்கள் அவதி, பெரும் மலை வெள்ளம் மக்கள் பாதிப்பு, நிகழும் மக்கள் பிரச்னையை திசை திருப்போன் நோக்கமாகவே, அரசியல் பிரவேச செய்தி அறிவித்திருக்கிறார், கண்டிப்பாக இவர் பின்னல் ஒரு அரசியல் கட்சி இயக்குகிறது என்பதில் சந்தேகம் இல்லை ...
தமிழ் மக்கள் பொறுப்பை உணர்ந்து, பகுத்தறிவோடு செயல் படவேண்டும்.