தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்ததை அடுத்து அதற்கு புரெவி எனப் பெயரிடப்பட்டது. இந்த புரெவி புயல் நேற்று இரவு இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படியே நேற்று இரவு திரிகோணமலை அருகே புயல் கரையைக் கடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் இருக்கும் புரெவி புயல், இன்று பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கு இடையே புயலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
03 12 2020