புதன், 6 ஜூலை, 2022

சமூகத்தைச் சீர்குலைக்கும் LGBTQ பேரணி

 சமூகத்தைச் சீர்குலைக்கும் LGBTQ பேரணி

கடந்த ஜூன் 26 ஆம் தேதி சென்னை எழும்பூரில் LGBTQ இன மக்களின் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அறிவதற்கு முன்பாக, முதலில் LGBTQ என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம்.
LGBTQ என்பதின் விரிவாக்கம்:
Lesbian - தன்பாலின ஈர்ப்புள்ள பெண்கள்
Gay - தன்பாலின ஈர்ப்புள்ள ஆண்கள்
Bisexual - இருபாலர் மீதும் ஈர்ப்புள்ள ஆண்கள், பெண்கள்
Transgender - திருநங்கைகள், திருநம்பிகள்
Queer or Questioning - வினோதமான பாலுணர்வு கொண்டவர்கள்
மேற்கண்ட பாலுணர்வு சிந்தனை கொண்டவர்களைக் சுட்டும் வகையில் சுருக்கமாக LGBTQ என்று குறிப்பிடப்படுகிறது. சிலர் LGBTQIA என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இதில், I - Intersex(ஊடுபாலினம் அதாவது ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத உடல் உறுப்பு கொண்டவர்கள்) என்றும் A - Asexual (எந்தப் பாலின ஈர்ப்பும் அற்றவர்கள்) என்றும் குறிப்பிடுகிறார்கள்.
ஜூன் மாதம் - பிரைட் மன்த்!
ஆணுக்குப் பெண்; பெண்ணுக்கு ஆண் என்ற இயற்கை நெறிக்கு மாற்றமாக, இத்தகைய முறையற்ற பாலுணுர்வு சிந்தனை கொண்டவர்கள் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தை Pride Month- பிரைட் மன்த் என்று கொண்டாடுகிறார்கள்.
1969 ஆண்டு அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கின் கிரீன்வில்லேஜ் பகுதிக்கு உட்பட்ட ஸ்டோன்வால் என்ற இடத்தில் கேளிக்கை விடுதிகளில் நிரம்பியிருந்த தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகள் வெடித்தன. கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
அந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியில் இவர்களுக்கு சில ஆதரவுகளும் கிடைத்தன. அந்த வகையில் இவர்களுக்கென சில அமைப்புகளும் அங்கு முதன்முதலில் அந்த ஆண்டு ஜூன் மாதம் தோன்றின.
இதை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் LGBTQ நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூம் மாதத்தை பிரைடு மன்த் என்று கொண்டாடுகிறார்கள்.
வானவில் கூட்டமைப்பு
தமிழகத்தில் LGBTQ நபர்கள் பல்வேறு பெயர்களில் அமைப்பாக செயல்படுகிறார்கள். இத்தகைய அமைப்புகள் அனைத்தையும் இணைத்து செயல்படும் ஒருங்கிணைந்த அமைப்பாக தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பு (TNRC) இருக்கிறது.
இந்த அமைப்பின் சார்பில் கடந்த 2009 ஆண்டு முதல் ஜூன் மாதந்தோறும் ”வானவில் சுயமரியாதை பேரணி” என்ற பெயரில் சென்னையில் பேரணி நடைபெற்று வருகிறது.
நாட்டில் தங்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகளுக்கு நன்றி தெரிவித்தும், இடங்கள் தோறும் துறைகள் தோறும் தங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட வலியுறுத்தியும் இந்தப் பேரணியை கடந்த மாதம் நடத்தி இருக்கிறார்கள்.
வெளிப்படையாக கூறுவதாக இருந்தால், பேரணி என்ற பெயரில் முகம் சுளிக்கும் வகையிலான ஆட்டம், பாட்டு, கூத்து, கும்மாளம் நடைபெற்றது மட்டுமல்லாமல், தங்களின் கேடுகெட்ட பாலுணர்வு சிந்தனையை நியாயப்படுத்தும் வகையிலும் பரப்பும் வகையிலும் மோசமான கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தப் பேரணியில் இவர்களுக்கு ஆதரவாக விலைமாதர்களும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாயின. ஆக மொத்தம் ஒழுக்கமான சமூக கட்டமைப்பை உடைத்தெறியத் துடிக்கும் ஆட்களின் சங்கமம் தான் இந்தப் பேரணி என்றால் மிகையல்ல.
அரசு இயந்திரமும் மீடியாக்களும்
கடந்த ஜூன் மாதம், முறையற்ற பாலுணர்வு சிந்தனை கொண்டவர்கள் சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் வெளிப்படையாக ஒன்றுதிரண்டு ஆரவாரம் செய்துள்ளனர்.
சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டிய செய்தி நிறுவனங்கள் அதை மறந்த நிலையில் இவர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து செய்தி பரப்பின.
தனிமனித உரிமை என்ற பெயரில் மீடியாக்கள் இவர்களுக்கு வக்காலத்து வாங்கியது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் அரசும் சம உரிமை எனும் பெயரில் இத்தகைய ஆட்களுக்கு அனுமதியும் ஆதரவும் வழங்கியது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
பாலியல் ரீதியான சரியான புரிதல் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை இல்லாமல் இருப்பது இதன் மூலமும் இதையொட்டி வெளியான கருத்துப் பதிவுகள் மூலமும் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கின்றன.
முறையற்ற பாலுணர்வு சிந்தனை ஏன்?
1. ஆண் பெண் என்ற உறவு தான் மனித இனத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை. இந்த அடிப்படைக்கு மாற்றமாக ஆணுக்கு ஆண் பெண்ணுக்கு பெண் என்று பாலுணர்வைத் தீர்த்துக் கொள்ளும் சிந்தனை இயற்கை நெறிக்கு மாறானது மட்டுமல்ல, தலைமுறை இல்லாத சமுதாயத்திற்குத் தான் வழிவகுக்கும்.
2. உடல் தோற்றத்தின் வெளிப்பாட்டிலோ நடத்தையிலோ ஒரு ஆணிடம் பெண்ணுக்குரிய சில அம்சங்கள் தென்படுகின்றன. இத்தகைய நபர்கள், பெரும் சதவீதம் ஆணாக இருப்பதால் இவர்கள் தங்களை ஆணாக தான் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அது தான் சரியும் கூட.
ஆனால், இவர்கள் சொற்பமான சதவீதத்தில் இருக்கும் பெண் தன்மைக்கு முக்கியத்தும் அளித்து தங்களை பெண்ணாக எண்ணிக் கொள்கிறார்கள். இதன் காரணமாக, திருநங்கைகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதற்கேற்ற வகையில் அறுவை சிகிச்சையைக் கூட சிலர் செய்து கொள்கிறார்கள்.
3. இதேபோன்று சில பெண்களிடம் உடல் தோற்றத்திலோ அல்லது நடத்தையிலோ ஆணுக்குரிய அம்சங்கள் இருக்கும். பெரும் சதவீதத்தில் பெண்ணுக்குரிய அம்சங்கள் இருப்பதால் இவர்கள் தங்களை பெண்ணாக தான் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் இவர்கள் சிறிய அளவில் இருக்கும் ஆண் அம்சத்தை பெரிதுபடுத்திக் கொண்டு தங்களை திருநம்பிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
4. கட்டுப்பாடு இல்லாமல் தகாத முறைகளில் பாலுணர்வை தீர்த்துக் கொள்ள விரும்பும் ஆட்கள் தங்களை இரு பாலுணர்வு வேட்கை கொண்டவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இயற்கையான நெறிமுறைக்கு மாறாக விநோதமான பாலுணர்வு கொண்டவர்களாக தங்களைக் எண்ணிக் கொள்கிறார்கள். இவர்களும் ஒழுக்கமான சமூக கட்டமைப்புக்கு ஆபத்தானவர்கள் என்பது தான் உண்மை.
மாறுபட்ட சிந்தனைக்கு தீர்வு என்ன?
உண்மையில் பாலுணர்வு ரீதியான நெறிபிறழ் சிந்தனைகள் உருவாகும் போது அதை சரியான கண்ணோட்டத்தில் களையாமல் அதை ஆமோத்தித்து அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தான் இத்தகைய நிலைக்கு காரணமாகும்.
சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் மட்டுமே, ஆண்கள் தங்களிடமுள்ள பெண் வெளிப்பாடுகள் இருந்தால் அதைக் கண்டு கொள்ளாமல் முழுமையான ஆண்களாக தங்களைக் காட்டிக் கொள்வார்கள். அதேபோன்று பெண்களும் தங்களிடமுள்ள ஆண் வெளிப்பாடுகளை கண்டு கொள்ளாமல் முழுமையான பெண்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.
பாலின வெளிப்பாட்டில், சிந்தனையில் ஒரு சில வேறுபாடுகள் இருக்கும் போது அதை எவ்வாறு அணுகுவது என்பதைக் சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக உரிமை, நீதி என்ற பெயரில் இது போன்ற தகாத தவறான பாலுணர்வு சிந்தனைகளை ஆதரிப்பது சமூக ஒழுக்கத்தின் கட்டமைப்பையே சீர்குலைத்து விடும்.
May be an image of 3 people and text

Like
Comment
Share

Related Posts: